கல்லூரி மாணவியை குண்டு கட்டாக தூக்கிய மர்ம நபர்கள்! புகார் அளிக்க மறுத்த காதலன்! காதலியின் பரிதாப நிலை!

Photo of author

By Hasini

கல்லூரி மாணவியை குண்டு கட்டாக தூக்கிய மர்ம நபர்கள்! புகார் அளிக்க மறுத்த காதலன்! காதலியின் பரிதாப நிலை!

உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மைசூர் டவுன் பகுதியில் உள்ள கல்லூரியில் ஒன்றில் படித்து வருகிறார். மேலும் இவரும், உடன் படிக்கும் ஒரு மாணவரும் காதலித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் ஒரு காரின் மூலம் மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்திலுள்ள லலிதா திரிபுரா பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு ஒரு ஆறு பேர் கொண்ட கும்பல் வந்தது.

மேலும் அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அந்த காதலனை சரமாரியாக தாக்கி விட்டு,  கட்டியும் போட்டனர். அதன் பின் அந்த மாணவியை அருகில் இருந்த புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். எல்லாவற்றையும் முடித்து விட்டு கல்லூரி மாணவியையும், அவரது காதலனையும், இங்கு நடந்த சம்பவங்கள் குறித்து வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு, தப்பி ஓடி விட்டனர்.

அதன்பின்னர் அந்த காதலன் தனது காதலியை மீட்டு சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அந்த மாணவியை பரிசோதித்த டாக்டர்களுக்கு அவர் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளானது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து மாணவியிடம் கேட்டபோது, அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார். இதன் காரணமாக மருத்துவமனை நிர்வாகத்தினர் யோசிக்காமல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் இளம் பெண்ணிடமும், அவரது காதலனிடமும் சம்பவம் குறித்து விசாரித்து தகவல்களை சேகரித்து கொண்டனர். மேலும் இந்த சம்பவம் நடந்த இடத்திற்கும் போலீசார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். அதை தொடர்ந்து கல்லூரி மாணவனிடம் இது குறித்து போலீசார் கேட்கும்போது அந்த மாணவன் இதைப் பற்றி கூற ஆர்வம் காட்டவில்லை என்பதால், இந்த சம்பவத்தில் காதலனின் நண்பர்கள் கூட ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதன் காரணமாக காதலனிடமும் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 6 பேர் கொண்ட கும்பலையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது