விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு எத்தனை ஜோடிகள் தெரியுமா? ஷிவானிக்கு அடுத்து படத்தில் இணையும் முக்கிய நடிகைகள்!

0
84
Vijay sethupathi get new pairs in vikram movie
Vijay sethupathi get new pairs in vikram movie

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு எத்தனை ஜோடிகள் தெரியுமா? ஷிவானிக்கு அடுத்து படத்தில் இணையும் முக்கிய நடிகைகள்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த திரைப்படமான விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்தத் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தில் விஜய்சேதுபதி,பகத்பாசில்,காளிதாஸ் ஜெயராம்,நரேன்,அர்ஜுன்தாஸ்,ஷிவானி நாராயணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

1986ம் ஆண்டு ஏற்கனவே விக்ரம் திரைப்படம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியானது.இந்தத் திரைப்படத்தின் அடுத்த பாகம் இது இல்லை என படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது.இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பார் என்று கூறப்பட்டது.ஆனால் படத்தில் பகத்பாசிலும் இருப்பதால் யார் வில்லன் என்று சரியாகக் கூறமுடியவில்லை.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு மேலும் இரண்டு நடிகைகள் ஜோடியாக சேர்ந்துள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது.சீரியல் நடிகையும் தமிழ் சினிமாவின் துணை நடிகையுமான மைனா நந்தினி இந்த படத்தில் இணைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிறது.மிரளும் இன்னொரு சீரியல் நடிகையும் இந்த படத்தில் இணைந்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.அந்த நடிகை யார் என்று தெரியவில்லை.

இந்த தகவலால் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நடிகர் கமல்ஹாசனுக்கு யார் ஜோடி என்பதை படக்குழு இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு மூன்று ஜோடிகள் என்பது ரசிகார்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் இன்னொரு படமான காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.இந்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு சமந்தா,நயன்தாரா என இரண்டு ஜோடிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K