முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

Photo of author

By Hasini

முதியவரை கடத்தி கொடுமை செய்த மர்ம நபர்கள்! தேடுதல் வேட்டையில் போலீசார்!

பெங்களூரில் ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மல்லத்தஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகவ் ராம். 87 வயதான இவர் தனியாக வசித்து வருகிறார். ராகவ் ராமின் உறவினர்கள் மைசூரில் வசித்து வருகிறார்கள்.அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து இவரை பார்த்து உடல்நலம் குறித்து விசாரித்து செல்வது வழக்கம். ஆனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்பு அங்கிருந்து இங்கு வர யாரும் வருவதில்லை. இதனால் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

இதனை கவனித்த மர்ம நபர்கள் சிலர் ராகவ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களில் ஒருவர் தனது பெயர் பிரபு என கூறிய அறிமுகப்படுத்திக்கொண்டான். பின்னர் மல்லத்தஹல்லியில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கும்படியும் மூன்று பேரும் கூறியுள்ளனர். இதற்காக சொத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்படி மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. உடனே அங்கிருந்து காரில் கடத்திச் சென்ற மூன்று பேரும், அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தாங்கள் சொல்லும் பத்திரத்தில் கையெழுத்து போட விட்டால் கொலை செய்துவிடுவோம் என்றும் கூறி அவரை மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர். சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வழியில் உள்ள வீட்டை வேறு ஒருவருக்கு எழுதிக் கொடுப்பதாக கூறி அவரிடம் இருந்து கையெழுத்து வாங்கியுள்ளனர். அத்துடன் வங்கிக்கு அழைத்துச் சென்று அவரது கணக்கிலிருந்து 20,000 எடுத்துவிட்டு அவரை விடுவித்து இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் பிரபு உள்ளிட்ட 3 பேர் மீது ராகவ்ராமின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அந்த 3 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.