ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி!

Photo of author

By Sakthi

ஓடும் ரயிலுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்! 5 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி!

வங்கதேசம் நாட்டில் ஓடும் பயணிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பெட்டியில் பயணித்தவர்களில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

வங்கதேசம் நாட்டில் நாளை(ஜனவரி7) பாராளுமன்ற தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் நாளை(ஜனவரி7) நடைபெறும் தேர்தலை எதிர்கட்சி புறக்கணிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வங்கதேச நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வங்கதேச நாட்டில் ஓடும் பயணிகள் ரயிலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச நாட்டில் ஜெஸ்ஸோர் நகரத்தில் இருந்து டாக்கா நோக்கி பெனபோல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த இரயிலில் 4 பெட்டிகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். ரயில் பெட்டியில் தீ பற்றியதை பார்த்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து வெளியே சென்றனர். இருப்பினும் இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.

கடந்த மாதம் இது போன்று ரயிலுக்கு தீ வைத்ததில் 4 பேர் உயிரிழந்தனர். தற்பொழுது எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக கூறி வருவதால் இன்று(ஜனவரி6) நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சிகள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை(ஜனவரி7) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று(ஜனவரி6) ரயில் பெட்டிகளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.