ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டி! குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் மோதல்!

0
184
#image_title

ஐசிசி உலகக் கோப்பை டி20 போட்டி! குரூப் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி பாகிஸ்தானுடன் மீண்டும் மோதல்!

2024ம் ஆண்டு தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் எந்தெந்த பிரிவில் இடம்பெற்றுள்ளது என்பதையும் போட்டிகளுக்கான அட்டவணையையும் ஐசிசி தற்பொழுது வெளியிட்டுள்ளது.

உலகமே மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி தொடங்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து நடத்துகின்றது.

மொத்தம் 55 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் 41 போட்டிகள் கரீபியன் தீவுகளில் நடைபெறவுள்ளது. மேலும் அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் டிரினிடாட் & டுபாகோ மற்றும் கயானா ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது. 2024ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி ஜூன் 29ம் தேதி பார்படாஸ் நகரத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் முத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளது. உலகக் கோப்பையை இணைந்து நடத்தும் அமெரிக்கா ஜூன் 1ம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் கனடாவை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்தியா விளையாடும் நான்கு லீக் போட்டிகள் குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கின்றது. இந்தியா தன்னுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கின்றது.

உலகமே எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த முறையும் நடைபெறவுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 9ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இந்திய அணி ஜூன் 12ம் தேதி நடைபெறும் போட்டியில் அமெரிக்கா அணியையும் ஜூன் 15ம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா அணியையும் எதிர்கொள்கின்றது.

மேலும் எந்தெந்த குரூப் பிரிவில் எந்தெந்த அணிகள் பங்கேற்றுள்ளது என்பது குறித்த தகவல்களும் வெளியாகி இருக்கின்றது. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கனடா, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.

அதேபோல குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளது. அதேபோல குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, உகான்டா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.