அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!?

Photo of author

By Parthipan K

அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!?

பண்ருட்டியிலிருந்து பாலூர் வழியாக கடலூரை நோக்கி அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று மர்ம  நபர்கள்  பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது கல் எறிந்து விட்டு சென்றனர்.

அப்போது பலத்த சத்தத்துடன் பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பேருந்தில் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறி கத்தினார்கள். பேருந்தின் டயர் தான் வெடித்தது என்று சிலர் கூச்சலிட்டனர். ஆனால் பேருந்தின் பின்பக்கத்தில் கண்ணாடி உடைந்து கொட்டியது.

இப்பாதிப்பை ஏற்படுத்திய மர்ப நபர்கள் யார் என்று டிரைவர் மற்றும் கண்டக்டர் இறங்கி பார்த்தபொழுது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தமர்ம நபர்கள்  தப்பித்து ஓடிச் சென்றனர். இதனைத்தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க உடனடியாக டிரைவர் அரசு பேருந்து கடலூர் நோக்கி  கொண்டு சென்றார்.

இது குறித்து நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்தின் கண்ணாடி உடைத்தது யார் என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் காயங்களின்றி உயிர் தப்பினர்.