அதிசயங்களே அசந்து போகும் மர்ம இடங்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!  

Photo of author

By Parthipan K

 

அதிசயங்களே அசந்து போகும் மர்ம இடங்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

நம் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் நாணயம் தவறுகிறது என்றால், கட்டாயம் அது கீழ் நோக்கி பாய்ந்து விழ வேண்டும். நிச்சயமாக அது பறந்து செல்லாது. ஆனால், இந்தப் பூமியில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்யாத மர்மமான இடங்களும் இருக்கின்றது.நம்மை பொருத்தவரையிலும் பசுமை போர்த்திய மலை, பரந்து விரிந்த வானம், வற்றாத மகா சமுத்திரங்கள், பாய்ந்தோடும் ஆறுகள், பனி மலைகள், எரிமலைகள் என கண்ணெதிரே நாம் பார்க்கும் இயற்கையின் அதிசயங்கள் வெகு குறைவு.

நம் கற்பனைக்கும் எட்டாத பல விஷயங்களை இயற்கை வைத்துள்ளது.ஆங்கிலேயே இயற்பியல் விஞ்ஞானி கடந்த 17ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக புவி ஈர்ப்பு சக்தியை கண்டறிந்தார். அதன் அடிப்படையில், இந்த பூமியில் உள்ள அனைத்து பொருட்களுமே புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டது என்று கருதப்படுகிறது.

மேல்நோக்கி செல்லும் அருவி: தமிழில் நீர்வீழ்ச்சி என்ற சொல் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நீரானது கீழ் திசையை நோக்கி செல்லுதலே இந்த சொல்லுக்கான பெயர் காரணம் ஆகும். ஆனால், நீர் மேல் நோக்கி பாயும் மகாராஷ்டிர மாநிலம், கொங்கன் கடலோரப் பகுதியை ஒட்டிய டெக்கான் மலைப்பகுதியில் இந்த அருவி இருக்கிறது. இங்கு காற்றின் திசை மேல்நோக்கி பலமடங்கு வேகமாக சுழல்வதால் அருவியானது மேல்நோக்கி பாய்கிறது.

மர்ம பிரதேசம், அமெரிக்கா: கலிஃபோர்னியா மாகாணத்தின் சாண்டா க்ரூஸ் பகுதியில் சுமார் 150 அடி சுற்றளவில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் அந்தரத்தில் நடந்து செல்ல வேண்டியிருக்கும். திடீரென்று விழுபவர்களும் உண்டு. ஆனாலும், சுவாரஸ்யம் கருதி மக்கள் இங்கு வருகின்றனர்.