குலதெய்வ அருளை பெற இந்த தாயத்தை கட்டுங்கள்! உங்களுக்கு கண்திருஷ்டியே இருக்காது!

0
133

குலதெய்வ அருளை பெற இந்த தாயத்தை கட்டுங்கள்! உங்களுக்கு கண்திருஷ்டியே இருக்காது!

கருங்காலி என்பது ஒருவகை மரமாகும். இம்மரம் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இம்மரத்தில் இருந்து மிகவும் உறுதியான பலகைகள் கிடைக்கின்றது. அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட அபூர்வமான மரம் என கூறப்படுகிறது.

மேலும் குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்ட பகுதியை வைரம் என்பர்.கருங்காலி மரத்தின் பட்டை, பிசின், வேர் போன்றவை அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத்தன்மை மிக்கது. கருங்காலி, தேக்கை விட விலை உயர்ந்தது. கருங்காலி மரத்தை பச்சை தங்கம் என்பார்கள்.

கருங்காலி மரத்தை பழங்காலம் தொட்டு உபயோகப்படுத்துவதன் நோக்கம், இது பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சக்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், எதிர்மறை சக்தியை விலக்கி விடும் அல்லது தங்கவிடாது என்னும் நம்பிக்கை உண்டு.

கருங்காலி மரத்தை மக்கள் செவ்வாய் கிரகத்தின் அம்சமாக வணங்கி வருகிறார்கள். செவ்வாய் கிரகத்தினால் ஏற்படும் தீய விளைவுகள், தோஷங்களில் இருந்து நம்மை காக்கிறது.மேலும், செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகப்பெருமான் ஆவார். ஒருவருக்கு சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய் பகவான் மற்றும் முருகனின் அருளாசி நிச்சயம் தேவை. மேலும், கருங்காலி குலதெய்வத்தின் அருளை பெற்றுத்தரும்.

கண் திருஷ்டி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வகையில் கருங்காலியிலான பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.கருங்காலி இருக்கும் இடத்தை சுற்றிலும் நேர்மறை சக்திகளை அதிகப்படுத்துகிறது. வீட்டில் கருங்காலியில் ஆன பொருட்கள் வைத்திருந்தால் மிகுந்த நல்ல பலன்களை அளிக்கும்.

எதிர்மறையான சூழ்நிலையில் இருப்பவர்கள் கருங்காலியில் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் அனைத்து பிரச்சனைகளும் வந்த வழியே திரும்பி சென்றுவிடும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

 

author avatar
Parthipan K