நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்

0
234

நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்

பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த துடிக்கும் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நடிகரும் இயக்குனருமான சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடந்த சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா பேசினார். அந்த விழாவின் போது அவர் பேசுகையில் மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது என்றும் முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள் என்றும் பேசியிருந்தார்.

மேலும் அவர் பேசுகையில் எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றும் பேசினார்.ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து அடங்கிய நிலையில் மீண்டும் இது குறித்து நடிகர் சூர்யா பேசியது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்களின் கருத்து

நடிகர் சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது கருத்தை எச் ராஜா, தமிழிசை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் கண்டித்தனர்.

புதிய கல்விக் கொள்கை சூர்யா பேச்சு பற்றி சீமான் கருத்து

இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடிகரும் இயக்குனருமான சீமான் கூறுகையில் புதிய கல்விக் கொள்கையில் சூர்யா பேசியதில் அரசியல் பார்க்கக் கூடாது. இது அடிப்படை உரிமையாகும். நான் பல ஆண்டுகளாக பேசுவதைத்தான் தற்போது சூர்யா பேசியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும். சினிமா துறை சார்ந்த பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும் போது சூர்யா தன் மனதில் பட்டதை தைரியமாக கூறியுள்ளார் என்றும் மறைமுகமாக பெரிய நடிகர்களை சீமான் சீண்டியுள்ளார்.

சமச்சீர் கல்வி பற்றி சீமான்

கல்வி என்பது மானுட உரிமை. அதை நியாயமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். சூர்யா கேட்கும் கேள்விகளில் எத்தனை நியாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் ஆட்சி செய்த கருணாநிதி ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள். ஆனால் அப்போது சமச்சீர் கல்வி முறை என்பது இல்லை.

கிராமப்புற பள்ளியில் படிக்கும் மாணவர்களும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஒரே தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது வாய்ப்பில்லை. இது எவ்வாறு சமவாய்ப்பாக அமையும். இதைத்தான் சூர்யா சொல்கிறார். எனவே புதிய கல்விக் கொள்கை என்பதை ஏற்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா பேச்சுக்கு ஆதரவளித்து அவருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இணைந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாம்: அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள நாடு எது தெரியுமா?

மத்தியில் ஆள்வது தங்களுடைய பாஜக என்றாலும் மாநிலத்தில் அரசியல் செய்ய வேண்டுமென்றால் மாநில நலன்களை குறித்தும் பேச வேண்டும் என்பதை தமிழக பாஜக தலைவர்கள் என்று புரிந்து கொள்வார்களோ?

Previous articleஅடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள நாடு எது தெரியுமா?
Next articleபுதிய கல்வி கொள்கை கருத்தில் நடிகர் சூர்யாவை ஆதரிக்கும் அன்புமணி ராமதாஸ்