தொண்டை கிழிய கத்திட்டு இருக்கேன் எப்போ என் பேச்சை கேப்பிர்கள்? கொட்டும் மழையில் வெறிப் பேச்சு! கை கொடுத்ததா சீமான் பேச்சு?

0
189

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக குறிப்பிட்ட இடத்தில் பெரும் அளவு திமுகவின் பணம் தேர்தல் ஆணையத்தின் மூலம் பிடிக்கப்பட்டு பின்பு வேலூர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு தேர்தல் ஆணையம் வேலூர் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து இந்த மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடை பெற்றது. வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதி எண்ணபட்டு அன்றே தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் திமுக ரொம்ப கஷ்டப்பட்டு தான் வெற்றி பெற்றது என்று கூற முடியும். மற்ற தொகுதிகளில் திமுக 3 லட்சம் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் கூட வேலூர் தொகுதியில் அப்படி வெற்றி பெற முடியவில்லை. காரணம் அதிமுக ஏ.சி.சண்முகம் திமுகவிற்கு நெருக்கடி கொடுத்தார் என்பது நிதர்சன உண்மை.

ஆனால் அதை விட திமுக மற்றும் அதிமுக இரு கட்சிகளுக்கும் நெருக்கடி கொடுத்தது சீமானின் நாம் தமிழர் கட்சி என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு அள்ளி அள்ளி பணம் கொடுத்தன. அதை இரண்டு கட்சிகளும் மறுக்க முடியாது. ஆனால் பணமே கொடுக்காமல் கால் கடுக்க நடந்து தொண்டை கிலிய கத்தி வாக்குகளை சேகரித்த கட்சி நாம் தமிழர் கட்சி.

இன்று திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தாமத படுத்தி, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அக்கட்சிக்கு வாக்குகள் விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவுக்கு வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி போன்ற நகர்ப்புற வாக்குகள் கை கொடுத்தது போல சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் நகர்ப்புற வாக்குகள் கூடுதலாக கிடைத்து என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்திலிருந்தே மெதுவாக வாக்குகளில் முன்னேறி வந்த நாம் தமிழர் கட்சி நகர்ப்புற வாக்கு எண்ணிக்கை நடந்த உடன் கூடுதல் வாக்குகளை பெற்றது.

சீமான் மேடை பேச்சு அனல் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சீமான் அடிக்கடி கூட்டத்தில் பேசும்போது சொல்லுவார், நான் ஒருத்தன் தொண்டை தண்ணி வற்ற கத்திட்டு இருக்கேனே.. மக்கள் இதை எப்போதான் புரிஞ்சிப்பீங்க? என்பார். அவர் திமுக அதிமுக கட்சிகளை பொதுவாகவே விமர்சனம் செய்வார். அவர் பேசிய பேச்சுக்களும், ஒரு கட்சி விடாமல் எல்லாரையும் நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்டதும் வீண் போகவில்லை.

அந்த கட்சி வேலூர் தேர்தலின் ஏறக்குறைய 30 ஆயிரம் வாக்குகளை பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சீமானின் நாம் தமிழர் கட்சி வளர்ச்சி மெதுவாக அதிகரித்து வருகிறது என்பது நிதர்சன உண்மை ஆகும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleகொட்டித் தீர்த்த கனமழையால் நனைந்த முதலமைச்சர்! குவியும் பாராட்டுக்கள்!!
Next articleபாமகவின் பல ஆண்டு கனவு திட்டத்தை தமிழக அரசு செயல் படுத்த வேண்டும்! MP அன்புமணி ராமதாஸ் முதல்வரிடம் வேண்டுகோள்!