நானே வருவேன் வசூல் விளம்பரம் செய்த தாணு… 200 சதவீதம் பொய்யென்று கூறிய சினிமா பிரபலம்!
நானே வருவேன் திரைப்படம் மோசமான வசூலைக் குவித்தாலும், அதன் தயாரிப்பாளர் தாணு படம் வெற்றிப்படம் என்று விளம்பரப்படுத்தினார்.
பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்டமான பேன் இந்தியா திரைப்படம் ரிலீஸாகும் நேரத்தில் தனுஷ் நடித்த நானே வருவேன் ரிலீஸனது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது. அதோடு படமும் ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை.
த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆனாலும், ஒரு குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே கவரும் என்பதால் இப்போது ரிலீஸ் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. மேலும் ஆச்சர்யப்படும் வகையில் படத்துக்காக படக்குழுவினர் எந்தவொரு ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் படம் மிகப்பெரிய வெற்றிப்படம் என விளம்பரம் செய்த தயாரிப்பாளர் தாணு, பத்திரிக்கையில் தஞ்சாவூரில் உள்ள ஒரே திரையரங்கில் மட்டும் படத்தின் தயாரிப்பாளர் பங்காக 50 லட்சம் வரும் என்று விளம்பரப்படுத்தினார். அப்போது இது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. மேலும் படம் ரிலீஸான சில நாட்களில் இயக்குனர் செல்வராகவனுக்கு ஆளுயர ராட்சச மாலை போட்டு அதையும் விளம்பரப்படுத்தினார்.
இந்நிலையில் இப்போது சினிமா திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமண்யம் “அப்படி ஒரே தியேட்டரில் 50 லட்சம் வசூல் வர 200 சதவீதம் வாய்ப்பே இல்லை. அந்த படம் திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவிலேய் ஒரு கோடி ரூபாய்தான் ஷேர் வரும்.” எனக் கூறியுள்ளார்.