பாகிஸ்தான ஜெயிச்சா கப்பு நம்புள்து பிகிலு…. ஆருடம் சொன்ன முன்னாள் இந்திய வீரர்!

0
228

பாகிஸ்தான ஜெயிச்சா கப்பு நம்புள்து பிகிலு…. ஆருடம் சொன்ன முன்னாள் இந்திய வீரர்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 23 ஆம் தேதி நடக்க உள்ளது.

உலகக் கோப்பை தொடரில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தங்கள் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த  போட்டி மிகுந்த சவாலான ஒன்றாக இரு அணி வீரர்களுக்கும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், அதன் பிறகு கோப்பையை வெல்வது கூட எளிதாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா “இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தினால் உலகக்கோப்பையை வெல்லும் என நான் நினைக்கிறேன். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக செயல்படுகிறார். கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு நடக்கும் ஐச்சி டி 20 கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அதில் இருந்து அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.

Previous articleநானே வருவேன் வசூல் விளம்பரம் செய்த தாணு… 200 சதவீதம் பொய்யென்று கூறிய சினிமா பிரபலம்!
Next articleதிடீர்னு ரிலீஸ் தேதிய மாத்தும் வாரிசு படக்குழு… ஆனாலும் ரசிகர்கள் ஹேப்பிதான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here