நாக சைதன்யா சமந்தாவிற்கு நடந்த அதே ரூம் அதே நாள்.. இன்று பொண்ணு மட்டும் வேற!! இணையத்தை கலக்கும் போட்டோ கிளிக்!! 

Photo of author

By Rupa

 

நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் ஏ மாயா சேசவே, மனம், ஆட்டோ நகர் சூர்யா, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தது மூலம் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. சமந்தா அவர்கள் முதன் முதலில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாக சைத்தானிய விடம் மனம் திறந்து தனது காதலை தெரிவித்துள்ளார். இருவரும் காதல் வசப்பட்ட அதே நாளான இன்று சமந்தாவை பழிவாங்கும் நோக்கில் நாக சைத்தன்யா மற்றும் சுபிதா விற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மேற்கொண்டு இது குறித்து பார்க்கையில், கடந்த 2017 ஆம் ஆண்டு திரையுலகையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருக்கும்  திருமணம் நடைபெற்றது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து இந்த பந்தமானது 2021 ஆம் ஆண்டு முடிவும் பெற்றது. இதனைத் தொடர்ந்து பலரும் இதற்கு வருத்தம் மற்றும் சமந்தா தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறி வந்தனர். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு பல கவர்ச்சிகரமான பாடல் காட்சிகளில் நடிப்பதுதான் இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்ட காரணம் என்று அரசல் புரசலாக பேசப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சமந்தா பல கிளாமர் பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்தார். மேலும் மயோசிடிஸ் என்ற நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நாக சைத்தன்யா மற்றும் சோபிதா இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. அந்தவகையில் இன்று சமந்தாவிற்கு நடைபெற்ற அதே வீட்டில் நாக சைதன்யா மற்றும் சோபிதா விற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாகர்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.