மேடையில் தமிழர்களை கொச்சையாக பேசிய நாகேஷ்வர ராவ் – கோபத்தில் சிவாஜி என்ன செய்தார்ன்னு தெரியுமா?
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவாஜி. இவரை ரசிகர்கள் நடிகர் திலகம் என்று அழைக்கின்றனர். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் சிவாஜி நடித்துள்ளார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நேடித்துள்ளார்.
சிவாஜி கணேசனுக்கு சினிமா என்பது தொழில் அல்ல; வாழ்க்கை. அப்படித்தான் அவர் வாழ்ந்தார். தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத தடத்தைப் பதித்த மிகச் சில நடிகர்களில் சிவாஜி கணேசனும் ஒருவர்.
இவ்வளவு மிக சிறந்த நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன் கடைசி வரைக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கவில்லை.
நடிகர் சிவாஜி தமிழ் மேல் மிகுந்த பற்றுள்ளவர். சிவாஜிக்கு ஒரு சம்பவம் நடந்தது. அந்த காலத்தில் சென்னையில்தான் அனைத்து மொழி படங்களின் படபிடிப்புகள் நடக்கும். தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் நடித்த படம் ‘எங்கள் செல்வி’. இப்படத்தை யோகானந்த் இயக்கினார். இப்படத்தின் கடைசி நாளை கொண்டாட திரையுலகினருக்கு விருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது, அந்த நிகழ்ச்சியில் சிவாஜி கலந்து கொண்டார். மேடையில் பேசிய ராவ், நான் தமிழில் நல்லாத்தான் நடிக்கிறேன். ஆனால், இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் என்னை திட்டுகிறார்கள். இதனால், தமிழ் மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பதான் இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன் என்று தமிழர்களை குறைவாக பேசினாராம்.
அப்போது ராவ்விடம் பேசிய சிவாஜி… என்னப்பா இது… இப்படி பேசிவிட்டீர்களே.. நீங்கள் உங்கள் மாநிலத்திற்கு போகப்போகிறீர்கள். அதற்காக ஏன் தமிழர்கள் மேல் பழியைப் போடுகிறீர்கள். நீங்கள் தெலுங்கில் நடித்த தேவதாஸ் படத்தினை 100 நாட்கள் ஓட வைத்தது யார். இந்த தமிழ் மக்கள்தானே. உங்களுக்கு அதிக பணம் ஆந்திராவில் கிடைப்பதால் அங்கு போகப்போகிறீர்கள். அதற்காக என் தமிழர்களை குறை சொன்னால் எப்படி. அதை என்னால் ஏற்க முடியாது என்று சிவாஜி சொல்ல, நாகேஷ்வர ராவ் சிவாஜியிடம் மன்னிப்பும் கேட்டாராம்.