நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம்

0
139

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் விபத்து! பணியாளர்கள் 15 பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இங்கு 5 அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிருக்கும் பாய்லர்களுக்கு நிலக்கரிகள் ஏற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த பணியை ஷிப்ட் முறையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் பாய்வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். அங்கு தீயணைப்பு பணி மிக வேகமாக நடந்து வருகிறது. அனல்மின் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது போல் கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டு மக்கள் மயங்கி விழுந்த சம்பவம் அரங்கேறியதும் குறிப்பிடத்தக்கது. தொழிற்சாலைகளில் தொடரும் விபத்துகளை தவிர்க்க சரியான வழிமுறைகளை செயல்படுத்தினாலும் சில விபத்துகள் தவிர்க்க முடியாததாக அமைந்துவிடுகின்றன. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க நவீன பாதுகாப்பு முறையை செயல்படுத்தினால் உயிரிழப்பை தவிர்க்க முடியும் என்பது பலரது கருத்தாக முன்வைக்கப்படுகிறது.

Previous articleதமிழகம் முழுவதும் இன்று காலை முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்திற்கு தடை!!தமிழக அரசு உத்தரவு..!!
Next articleமுதுகு வலியை தடுக்க எளிய வழிகள்.! ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளுங்கள்.!!