திண்டுக்கல் அரசுப்பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை.. குழம்பிய பயணிகள்..!!

Photo of author

By Vijay

திண்டுக்கல் அரசுப்பேருந்தில் சீன மொழியில் பெயர் பலகை.. குழம்பிய பயணிகள்..!!

தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப்பேருந்துகளில் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் என இருபுறமும் பெயர் பலகைகள் இருக்கும். இதன் மூலம் பேருந்து எங்கு செல்கிறது என்பதை பயணிகள் எளிதாக படித்து தெரிந்து கொள்ளலாம். முன்பெல்லாம் இந்த பெயர் பலகைகள் மரப்பலகையில் இருக்கும். இதை இரவு நேரங்களில் படிப்பது சற்று சிரமமாக இருக்கும்.

இதனால் சமீபகாலமாக அரசுப்பேருந்துகளில் டிஜிட்டல் பெயர் பலகைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன். பேருந்தின் இருபுறமுன் டிஜிட்டல் போர்டு ஒன்றில் பேருந்து எந்த வழியாக பயணிக்கிறது என்பது போன்ற தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் இரவு நேரங்களிலும் இதை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமல்ல பயணிகளின் வசதிக்காக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் இருக்கும். தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பொதுவான மொழிகள் தான். ஆனால் சீன மொழி தமிழகத்தில் பலருக்கும் அல்ல யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்படி உள்ள சூழலில் திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து ஒன்றில் சீன மொழியில் பெயர் பலகை இருந்துள்ளது.

அதன்படி திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரை இயங்கிய அந்த பேருந்தின் டிஜிட்டல் போர்டில் சீன மொழியில் பெயர் இருந்ததால், பயணிகள் குழம்பியுள்ளனர். அதில் ஏற்கனவே ஏறி அமர்ந்த பயணிகளும் சரி புதிதாக ஏறுவதற்காக காத்திருந்த பயணிகளும் சரி குழப்பத்திலேயே இருந்துள்ளனர். இது எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. எப்போதாவது இதுபோன்ற குளறுபடிகள் டிஜிட்டல் போர்டுகளில் நடக்குமென ஊழியர்கள் கூறியுள்ளனர்.