கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் முக்கிய பிரபலம்!! வாழ்த்து கூறும் ரசிகர்கள்!!

0
102

கர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் முக்கிய பிரபலம்!! வாழ்த்து கூறும் ரசிகர்கள்!!

தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்தான் பாக்யலட்சுமி. மேலும் ஒரு குடும்பத்தலைவி கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு குடும்ப பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.

இந்த தொடரில் உள்ள முக்கிய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி தான் சுசித்ரா. மேலும் அவரது கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷ் அவர்களை நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நந்திதா ஜெனிஃபர்.

https://www.instagram.com/p/CRny3vcjRJ_/?utm_source=ig_web_copy_link

இவர் பாக்கியலட்சுமி தோழியாகவும், அவரது கணவரின் முன்னாள் காதலியாகவும், நெருக்கமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது ஜெனிபர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் சீரியலில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெனிபர் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

அதற்கு காரணம் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரம் நெகட்டிவாக மாற இருப்பது என்று அவர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு மகன் இருக்கும், இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அவர் கற்பகாலத்தில் முதன்முறையாக நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கங்க்ராஜுலேஷன், சூப்பர், வாழ்த்துக்கள் என்று கூறி வருகின்றனர்.

author avatar
Jayachithra