சென்னையில் பிடிபட்ட போதைப் பொருள்!! கடத்தல் பின்னணியில் முன்னாள் டிஜிபி மகன்!!

Photo of author

By Vijay

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் நடமாட்டம் பெருகி வருகிறது. கஞ்சா போதை பழக்கத்திற்கு  பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் உள்ளாகி வருகிறார்கள். தமிழகத்தில் போதை பழக்கத்தை தடுக்க காவல்துறையினரால்  போதைப்பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.  அதன்  மூலம் போதை பொருள் பயன்படுத்தியவர்கள், விற்றவர்கள். அதை பயன்படுத்தி கொலை, கொள்ளை குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்  கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

மெத்த பெட்டமைன் என்பது கஞ்சாவை விட அதிக போதை தருவது,  இந்த போதை பொருளுக்கு இளைஞர்கள் பெரும்பாளானோர் அடிமையாகி வருகிறார்கள். இதனை விற்பனை செய்தல் கமிஷன் அதிகம் கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள் இந்த போதை விற்பனை வலையில் சிக்கி உள்ளார்கள். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் மெத்த பெட்டமைன் எனும் போதை பொருளை கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  நைஜீரியாவை சேர்ந்த ஜான் எஸி,  மெக்கலன், அருண் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அருண் என்பவர் முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத்தின் மகன் என தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 2.5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளும், ஒரு லட்சம் பணம், அவர்களின் செல்போன் போன்றவைகள் பொலிசாரால் கைப்பற்றபட்டது. மேலும் இவர்களுக்கு பின்னால் வேறு யாராவது உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை  நடந்து வருகிறது. தமிழக முன்னாள் டிஜிபி யின் மகனே போதைப்பொருள்  கடத்தலில் ஈடுபட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.