மூக்கு ஓட்டைக்குள் சிறிது கீறல் ஏற்பட்டாலே தாங்க முடியாத வலியை அனுபவிக்க நேரிடும்.அப்படி இருக்கையில் சீழ் கொப்பளம் உருவானால் அவை குணமாவதற்குள் கடுமையான வலி மற்றும் எரிச்சல் ஏற்பட்டு ஒரு வழியாகிவிடுவோம்.
உங்களில் பலருக்கு மூக்கு ஓட்டையில் அடிக்கடி கொப்பளம் ஏற்படும்.உடல் உஷ்ணம்,கிருமி தொற்றுகளால் இந்த கொப்பளங்கள் உருவாகிறது.சிலருக்கு இந்த கொப்பளங்கள் ஆற சில வாரங்கள் எடுத்துக் கொள்ளும்.இந்த கொப்பளங்கள் வந்த இடத்தில் சிவந்து வீங்கி காணப்படும்.மூக்கு ஓட்டைக்குள் வந்துள்ள சீழ் கொப்பளங்கள் காய்ந்து விழ கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெமிடியை ஒருமுறை மட்டும் பின்பற்றவும்.
மூக்கில் கொப்பளம் வருவதற்கான அறிகுறிகள்:
*மூக்கிற்குள் சிறிய வெண் புள்ளி தென்படுதல்
*மூக்கு பகுதியில் வீக்கம் மற்றும் வலி உணர்வு
*மூக்கு சிவத்தல்
மூக்கு ஓட்டையில் உள்ள கொப்பளங்களை காய்ந்து உதிர வைக்கும் ஹோம் ரெமிடி:
1)தேங்காய் எண்ணெய்
2)வேப்பிலை
ஒரு கொத்து வேப்பிலையை அரைத்து 20 மில்லி தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி மூக்கு ஓட்டையில் உள்ள கொப்பளம் மீது தடவினால் அவை சீக்கிரம் காய்ந்து உதிர்ந்துவிடும்.
1)எலுமிச்சை சாறு
2)மஞ்சள் தூள்
ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து மூக்கில் உள்ள கொப்பளங்கள் மீது தடவினால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.
1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தண்ணீர்
ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை கால் கிளாஸ் வெது வெதுப்பான நீரில் கலந்து மூக்கு பகுதியை கழுவ வேண்டும்.
இவ்வாறு தினமும் மூன்றுவேளை செய்து வந்தால் மூக்கு ஓட்டையில் உள்ள கொப்பளம் குணமாகிவிடும்.
1)தேங்காய் எண்ணெய்
2)மஞ்சள் தூள்
கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெது வெதுப்பான தேங்காய் எண்ணெய் ஊற்றி கால் தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து குழைத்து கொப்பளம் மீது வைத்தால் அவை காய்ந்து உதிர்ந்துவிடும்.