அதிமுகவின் முக்கிய புள்ளி மருத்துவமனையில் அனுமதி! சோகத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

0
177

முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான நத்தம் விஸ்வநாதன் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கிறார். அதோடு நத்தம் சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராகவும், இருக்கிறார். தற்சமயம் அவர் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார்.

இந்த சூழ்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென்று வயிற்று வலி உண்டானது உடனடியாக அவர் கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருடைய உடல் நிலையை பரிசோதித்து வருகிறார்கள். அவர் நல்ல நிலையில், இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நத்தம் விசுவநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷயத்தை அறிந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்புகொண்டு அவருடைய உடல்நிலை தொடர்பாக விசாரித்தார்.

Previous articleதமிழக சட்ட சபையில் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உயர்கல்வித்துறை அமைச்சர்!
Next articleசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் மரணம்! அதிர்ச்சியில் ரஜினி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here