மயிலாடும்பாறையில் வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு பிரச்சாரம்!

0
202
National flag awareness campaign from house to house in Mayilatumparai!
National flag awareness campaign from house to house in Mayilatumparai!
மயிலாடும்பாறையில் வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு பிரச்சாரம்!
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக75வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ பிரிவு மாவட்டச் செயலாளர் தெய்வம் ஜி கூறுகையில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் வேண்டுகோளின் படியும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் புரட்சி நாயகன் திரு அண்ணாமலை ஜி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரப்படி நம் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவாக வருகிற 13 ,14,15 ஆம் தேதி வீடு தோறும் தேசிய கொடி ஏற்றி நமது சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தியும் நமது தேசத்து ஒற்றுமையை உலகிற்கு எடுத்துச் செல்வோம்.
மேலும் தேசியக் கொடியின் மூன்று வண்ணங்கள் சில அர்த்தங்களை நமக்கு தெரிவிக்கின்றன. 1,காவிநிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது.
2, வெள்ளை நிறம் உண்மை மற்றும் தூய்மையை குறிக்கிறது.
3, பச்சை நிறம் பசுமை மற்றும் நம்பிக்கை யை குறிக்கிறது.
 இவை அனைத்தும் நம் நாட்டு இளைஞர்கள் ஒவ்வொரு மனதிலும் உருவாக வேண்டும். என்றும் நம் நாட்டின் வளர்ச்சி இளைஞர்களிடம் தான் உள்ளது. என்று நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களும் மற்றும் புரட்சி நாயகன் அண்ணாமலை ஜி அவர்களும் அடிக்கடி கூறுவார்கள் ஆகவே சகோதர சகோதரிகளே நமது ஒற்றுமையும் தேசப்பற்றும் ஒவ்வொரு மனதிலும் வளர்த்துக் கொண்டு நமது பாரத நாட்டை வல்லரசு நாடாக மாற்றுவோம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நமது மயிலாடும்பாறையில் இருந்து தொடங்கி தேனி மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம் என கூறினார்.
Previous articleவேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக உலக தாய்ப்பால் வார விழா!
Next articleதாஜ்மகாலை பார்வையிட வந்த தாய்லாந்து பயணிகளுக்கு அனுமதி மறுப்பு !..காரணம் என்ன?அவர்களிடம் அதிகாரிகள் கூறிய பதில் ?..