தேசிய வாலிபால் வீராங்கனை மரணம்! 24 வயதில் வீராங்கனைக்கு ஏற்பட்ட சோகம்!
தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்கள் 24 வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் தந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவை சேர்ந்த படங்கடி பொய்குடே பகுதியை சேர்ந்த தம்பதி ஆதம் மற்றும் ஹவ்வம்மா ஆவார்கள். இவர்களின் மகள் சாலியத் தேசிய அளவிலான வாலிபால் வீர்ங்கனை ஆவர். தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.
தேசிய வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்கள் கடந்த ஒரு வருடமாக சிக்கமங்களூரில் உள்ள அவருடைய கணவர் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று முன்தினம்(மே30) நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து சிகிச்சை பெற்றுவந்த வீராங்கனை சாலியத் சிகிச்சை பலன் இன்றி நேற்று(மே 31) உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டது.
வாலிபால் வீராங்கனை சாலியத் அவர்கள் சீனியர் தேசிய தென் மண்டல போட்டியில் தங்க பதக்கமும், தேசிய கைப்பந்து போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் கர்நாடக வாலிபால் அணியை இரண்டாவது இடத்திற்கு கொண்டாவருவதற்கு வீராங்கனை சாலியத் முக்கிய பங்கு வகித்துள்ளார்.