3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!!

Date:

Share post:

3233 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பந்தம்! சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!

அரசு முறை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 3233 கோடி ரூபாய்க்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக பேட்டியளித்துள்ளார்.

சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் சென்று நேற்று(மே31) சென்னை திரும்பினார். இதையடுத்து முதல்வரை வரவேற்க திமுகவினர் விமான நிலையத்தில் குவிந்தனர்.

இதையடுத்து சென்னை திரும்பிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள பொருளாதாரமானது மேம்பாடு அடையும் வகையில் இந்த பயணம் அமைந்தது. தமிழ்நாடு தொழில்துறையில் முதலிடத்தை பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் “3000 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பதற்கு திட்டம் இட்டோம். நினைத்ததை விட 3233 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக 5000க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும்” என்று கூறினார்.

 

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...