Natural Eye Kajal: உங்களுடைய கண்களின் அழகை கூட்டும் கண்மை! இது 100% நேச்சுரல் காஜல்!
பெண்கள் மற்றும் குழந்தைகளுடைய கண்களின் அழகை கூட்டுவதில் காஜலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.கருமை நிறத்தில் இருக்க கூடிய இந்த கண்மையை ஆதி காலத்தில் இருந்து பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இன்றைய மார்க்கெட்டில் விற்க கூடிய காஜல் பல இரசாயனப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது.இதனால் கண்களின் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்புள்ளது.எனவே கண்களை அழகாக வைக்க பாரம்பரிய முறையில் கண்மை காஜல் தயாரித்து பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)அகல் விளக்கு – 2
2)விளக்கெண்ணெய் – தேவையான அளவு
3)காட்டன் திரி – 2
4)பாதாம் பருப்பு – 10
5)பசு நெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:-
இரண்டு மண் அகல் விளக்கு எடுத்து அதில் விளக்கெண்ணெய் ஊற்றவும்.இவை செக்கில் ஆட்டிய சுத்தமான விளக்கெண்ணையாக இருக்க வேண்டும்.பின்னர் இரண்டு காட்டன் திரியை விளக்குகளில் வைத்து பற்ற வைக்கவும்.
இரு விளக்குகளையும் அருகருகில் வைக்கவும்.பின்னர் அதனை ஒரு தட்டு கொண்டு மூடி விடவும்.24 மணி நேரம் கழித்து அந்த தட்டை எடுத்தால் அடர் கருமையாக இருக்கும்.
அந்த தட்டில் உள்ள கருமை பவுடரை ஒரு கிண்ணத்திற்கு கொட்டவும்.பின்னர் அதில் இரண்டு தேக்கரண்டி சுத்தமான பசு நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அதன் பிறகு பாதாம் பருப்புகளை நெருப்பில் கருகும் வரை சுட்டெடுத்துக் கொள்ளவும்.இந்த பாதாமை ஒரு உரலில் போட்டு நன்கு இடித்து மை கலந்து வைத்துள்ள கிண்ணத்தில் போட்டு கலக்கவும்.
இவ்வாறு செய்தால் நேச்சுரல் கண்மை காஜல் கிடைத்து விடும்.இந்த கண்மையை ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.ஒரு முறை தயாரித்த கண்மை காஜலை 6 மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.