இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
மின்சார வாகனங்களுக்கு தற்போது அரசு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகின்றது.டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆத்மி அரசு எடுத்து வருகின்றது.இந்நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகின்றது. அதனால் சுற்றுப்புற சூழலில் காற்று மாசை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவற்றுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு நிரப்பிய வாகனங்களின் பயன்பாடும் டெல்லியில் அதிகரித்து வருகின்றது.இதனையடுத்து டெல்லியில் இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனம் கார்கள் போன்ற வாகனங்களுக்கு பயன்படுத்த கூடிய அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலையை கிலோ ஒன்றுக்கு ரூ மூன்று உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதனால் டெல்லியில் இனி ரூ78.61 ஆக விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.என்.ஜி சில்லரை விலையில் கிலோ ஒன்றுக்கு முசாபர்நகர் ,மீரட் மற்றும் சாம்லியில் ரூ 85.84ரேவாரியில் ரூ89.07 ,கர்னால் மற்றும் கைத்தல் நகரில் ரூ 87.27 ,கான்பூர் ,ஹமீர்பூர் மற்றும் பதேபூரில் 89.81, ஆஜ்மீர் பாலி மற்றும் ராஜ்மந்தில் ரூ 85.88 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகின்றது.இந்த விலை உயர்வானது இன்று காலை ஆறு மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.