இளநரையை கருமையாக மாற “இயற்கை ஹேர் டை” – தயார் செய்வது எப்படி?

Photo of author

By Divya

இளநரையை கருமையாக மாற “இயற்கை ஹேர் டை” – தயார் செய்வது எப்படி?

Divya

Updated on:

இளநரையை கருமையாக மாற “இயற்கை ஹேர் டை” – தயார் செய்வது எப்படி?

இன்றைய வாழ்க்கை முறையில் பெரியவர்கள், சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் தலை முடி நரை பாதிப்பு இருக்கிறது. இந்த இளநரையை மறைக்க இரசாயனம் கலந்த பொருட்களை தலைக்கு உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி இளநரையை நிரந்தரமாக கருமையாக்க முயற்சிப்பது நல்ல பலனை கொடுக்கும்.

இளநரை உருவாகக் காரணம்:-

*சத்து குறைபாடு

*ஆரோக்கியமற்ற உணவுமுறை

*ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை

*இரசாயன பொருட்களை முடிகளுக்கு பயன்படுத்துதல்

*அலர்ஜி

இளநரையை சரி செய்ய எளிய வழி:-

தேவையான பொருட்கள்:-

*செம்பருத்தி இலை -1 கைப்பிடி

*கற்றாழை மடல் – 1

*வாழைப் பழம் – 2

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி இலையை போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் 2 வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு கற்றாழை மடல் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். அதில் உள்ள ஜெல்லை மட்டும் ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல், நறுக்கி வைத்துள்ள வாழைப்பழ துண்டுகள் மற்றும் 1 கைப்பிடி அளவு செம்பருத்தி இலைகளை சேர்த்து மைய்ய அரைத்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். பின்னர் இந்த ஹேர் போக்கை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

இந்த ஹேர்பேக்கை தலை முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடம் வரை ஊறவைக்கவும். பின்னர் சீகைக்காய், கடலை மாவு, அரப்பு உள்ளிட்ட இயற்கை பொருட்களை பயன்படுத்தி கூந்தலை அலசிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட இளநரை பாதிப்பு முழுமையாக நீங்கி முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.