இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள் 

Photo of author

By Anand

இயற்கை முறையில் ஆண்மையை அதிகரிக்க எளிய வழிகள்

திருமணமான மற்றும் திருமணம் செய்து கொள்ள போகும் ஆண்களில் பலரும் தேடுவது இந்த ஆண்மை சம்பந்தமானதாக தான் இருக்கும்.எவ்வளவு தான் ஆங்கில மருந்துகள் வந்தாலும் பக்கவிளைவு இல்லாத இயற்கை உணவு மற்றும் மருந்துகள் போல எதுவும் அமையாது.

அந்த வகையில் இயற்கை முறையில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க உதவும் சில வழிகளை பார்ப்போம்.

தினசரி மாலை ஒரு ஐந்து முந்திரி பருப்பு எடுத்து நெய்யில் வறுத்து சாப்பிடலாம்.

தினசரி ஒரு ஐந்து பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அல்லது மாலை அதை உறித்துத் திண்ணலாம்.

மாசிக்கருவாடு வாங்கி இடித்துத் தூளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை உப்புமா செய்வது போல அவித்துத் தாளித்து பொறியல் போலச் செய்து கொள்ள வேண்டும். இதை நீங்கள் சாப்பிடும் எந்த உணவுடன் வேண்டுமானாலும் தொட்டுச் சாப்பிடலாம்.

வாரம் இருமுறை கடல் மீன் உணவு சாப்பிடுங்கள்.

உடல் பலம் பெற உளுந்தங்களி செய்து சாப்பிடலாம்.

ஆண்மையை பாதிக்கும் உடல் சூடு ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.இதற்காக தினசரி ஒரு இளநீர் குடிக்கலாம்.

உடலில் பித்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.நெல்லிக்காய் இஞ்சி சாறெடுத்து தேன் கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிடுங்கள்.

உடல் வலுப்பெற்று தாது உற்பத்தியாக அடிக்கடி எலும்பு சூப் சாப்பிடுங்கள்.

பிரண்டைத் துவையல் நெல்லிக்காய் சட்னி வைத்து சாப்பிடலாம்.

முருங்கைப்பூ பொறியல் முருங்கைக் கீரை வைத்து சாப்பிடலாம்.

உணவு வகைகள் மட்டுமல்லாமல் தினசரி முறையான உடற்பயிற்சி அவசியம்.

இரவு பத்து அல்லது பதினொரு மணிக்குள் உறங்கி விடவும்.

நல்ல உணவுப் பழக்கம் நல்ல உடற்பயிற்சி நல்ல பழக்க வழக்கங்கள் நிச்சயமாக உதவும்.

இவையனைத்தையும் முறையாக கடைபிடித்தால் உடலில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.