எல்லா வெள்ளை முடியும் கருமையாக மாற இதை போட்டால் போதும் ! இயற்கை ஹேர் டை!

0
189

எல்லா வெள்ளை முடியும் கருமையாக மாற இதை போட்டால் போதும் ! இயற்கை ஹேர் டை!

இன்றைய இளைஞர்கள் அதிகமாக ஒன்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அது தலைமுடி பிரச்சனை. இளவயதிலேயே இளநரை என்பது வந்துவிடுகிறது. அது ஒரு சில ஹார்மோன் குறைபாடுகளால் மற்றும் சத்து குறைவால் ஏற்பட வாய்ப்புள்ளது.

இளநரை மற்றும் முதுமையில் வரும் நரையை கூட கருமையாக மாற்றி முடி வளர கூடிய ஒரு அருமையான முறையை இங்கு பார்ப்போம். மருந்து கடைகளில் கிடைக்கும் ஹேர் டைகளை வாங்கி நீங்கள் பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த இயற்கை முறையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது அலர்ஜிகள் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:

1. பீட்ரூட்1

2. பிளாக் டீ (Black Tea) கால் கப்

3. அவுரி இலை பொடி.

செய்முறை:

1. பீட்ரூட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து மேலே உள்ள தோலை நீக்கி விட்டு துண்டுகளாக வெட்டி மிக்சியில் சேர்த்துக் கொள்ளவும்.

2. பின் அதனுடன் கால் கப் அளவிற்கு ப்ளாக் டீயை( இரண்டு ஸ்பூன் அளவுக்கு டீத்தூளை போட்டு நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ளவும்) சேர்த்துக் கொள்ளவும்.

3. இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

4. பின் ஒரு பௌலில் அவுரி இலை பொடி இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளவும்.நாட்டு மருந்து கடைகளில் அவுரி இலை பொடி கிடைக்கும். சுத்தமான அவுரி இலை பொடியை வாங்கி கொள்ளவும்.

5. இந்தப் பொடியுடன் அரைத்து வைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

6. 5 நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது அதன் நிறம் மாறி இருக்கும்.

பயன்படுத்தும் முறை:

1. இதை பயன்படுத்தும் போது உங்கள் தலை சுத்தமாக இருக்க வேண்டும். அதனால் தலைக்கு குளித்து விட்டு தலையை நன்றாக ஆற வைத்து விடவும்.

2. பின் இந்த கலவையை முடிகளின் வேர்கால்களில் இருந்து நுனி வரை தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

3. பின் முடியை வெறும் தண்ணீரில் அலசி விடவும். ஷாம்பு பயன்படுத்த கூடாது.

4. வாரம் மூன்று முறை செய்யும் பொழுது உங்களது முடி கருமையாக மாறுவதை காணலாம்.

 

 

 

 

Previous articleஉடல் எடையை அதிகரிக்கக் கூடிய அருமையான இயற்கை வைத்தியம்!
Next articleராகு – கேது பெயர்ச்சி பலன்கள் அதிர்ஷ்டம் தரும் ராகு-கேது பலன்கள் 2020-2022