ஒரே நாளில் உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் கரைத்து வெளியேற்றிவிடும்!

Photo of author

By Kowsalya

உடம்பில் உள்ள ஒட்டுமொத்த சளியையும் ஒரே வாரத்தில் நீக்கக் கூடிய அற்புதமான மருந்து. மழைக்காலம் ஆரம்பிச்சாச்சு! இப்பொழுது குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தலை பாரம் என வந்து பாடாய் படுத்தும். அதை நீக்க வராமல் தடுக்க இயற்கையாக நம் முன்னோர்கள் பயன்படுத்திய வழிமுறையை காண்போம்!

அதற்கு கடைகளில் போய் வாங்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் பயன்படுத்த கூடிய பொருள் தான்.

தேவையான பொருட்கள்:

1. கருவேப்பிலை பொடி

2. பனங்கற்கண்டு.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை நன்கு கொதிக்க வைக்கவும்.

2. பின் தண்ணீரை ஆற வைக்கவும்.

3. மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீருடன் ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை பொடியை சேர்த்து நன்கு கலக்கி விடவும். பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து கலக்கவும்.

4. இந்தத் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலையில் ஒருவேளை மாலையில் ஒரு வேளை என இரு நேரங்களில் குடிக்க வேண்டும்.

5. வெறும் வயிற்றில் குடித்து விட்டு அரைமணி நேரம் கழித்து சாப்பிடலாம்.

6. இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் மூன்று நாட்கள் எடுத்து வர உங்களுக்கு இருக்கும் எப்பேர்ப்பட்ட சளியாக இருந்தாலும் நீங்கிவிடும்.