கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் மங்குதல் சரிசெய்ய அற்புதமான வீட்டு வைத்தியம்!

0
996

கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் மங்குதல் சரிசெய்ய அற்புதமான வீட்டு வைத்தியம்!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கண் குறைபாடுகள் இப்பொழுது அதிகமாக காணப்படுகின்றது. அதிக நேரம் டிவி பார்ப்பதனாலும், அதிக நேரம் செல்போன்களில் விளையாடுவது மற்றும் செல்போன்களில் பொழுது போக்குவதை போன்ற விஷயங்களால் கண்ணில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. அதுவும் இரவில் அதிகநேரம் செல்போன்களைப் பயன்படுத்துவதால் அதில் வரும் ஒளிக்கதிர்கள் கண்களை பாதிக்கும் அபாயம் ஏற்படுகின்றது.

இதனால் சிறுவயதிலேயே கண்ணாடி அணியும் பழக்கம் குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. தூரப்பார்வை, கிட்டப்பார்வை, கண் மங்குதல் போன்ற பிரச்சனைகள் செல்போனினாலும் அதே போல் நமது உணவுப் பழக்கங்களாலும் ஏற்பட்டு விடுகின்றன. செல்போன் மற்றும் கணினி பார்ப்பதனால் ஒரு சில மன அழுத்தத்தை உண்டாக்கி கண்கள் பாதிக்கப்படுகின்றன. அதனை சரிசெய்ய இயற்கை வழி முறையை தான் இப்போது நாம் பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. குங்குமப்பூ

2. தேன்.

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஐந்து குங்குமப்பூவை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

2. தண்ணீர் 10 நிமிடம் நன்றாக கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு தேன் கலந்து பருகலாம்.

3. குங்குமப்பூவில் உள்ள விட்டமின் சத்துகள் கண் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. அதனால் இந்த இயற்கை முறையை தொடர்ந்து நீங்கள் ஒரு வாரம் வரை குடித்து வரலாம்.

இதனுடன் சில குறிப்புகள்:

1. பாதாம் பருப்பில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்துக்கள் கண்ணின் குறைபாடுகளை நீக்கும் தன்மை உடையது. அதனால் பாதாம்பருப்பை நான்கு அல்லது ஐந்து எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் அதனை தோலை நீக்கி சாப்பிட்டு வர கண் குறைபாடுகள் குறையும்.

2. அதேபோல் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரவேண்டும்.

3. முருங்கை இலை பூவை ஒரு கைப்பிடி எடுத்து பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வர கண்ணின் குறைபாடுகள் நிச்சயமாகக் குறையும்.

4. பொன்னாங்கண்ணிக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்டு வரலாம்.

Previous articleவன்னியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த திருமாவளவன்
Next articleகொள்ளுடன் இதை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பும் கரைந்துவிடும்!