NATURAL INHALER: இந்த மூன்று பொருட்களை கொண்டு நேச்சுரல் இன்ஹேலர் ஈசியாக செய்திடலாம்!!

Photo of author

By Rupa

NATURAL INHALER: இந்த மூன்று பொருட்களை கொண்டு நேச்சுரல் இன்ஹேலர் ஈசியாக செய்திடலாம்!!

உங்களில் பலருக்கு சளி உருவாகும் போது மூக்கடைப்பு பிரச்சனை ஏற்படும்.இதனால் மூக்கடைப்பு நீங்கி சுவாசிக்க சந்தையில் விற்க கூடிய இன்ஹேலர் பயன்படுத்தி வருவீர்கள்.ஆனால் இந்த இன்ஹேலர் தற்காலிக நிவாரணம் மட்டுமே தரும்.அது மட்டுமின்றி இந்த இன்ஹேலரில் அதிகப்படியான கெமிக்கல் கலக்கப்பட்டிருப்பதால் அதை சுவாசிக்க பயன்படுத்தும் பொழுது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே கடைகளில் விற்க கூடிய இன்ஹேலருக்கு பதில் நீங்களே இயற்கையான இன்ஹேலர் பயன்படுத்தி வந்தால் சளி,இருமல் தொந்தரவில் இருந்து நிரந்தர விடுதலை கிடைக்கும்.

நேச்சுரல் இன்ஹேலர் தயாரிக்கும் முறை:

1)செலரி – 2 ஸ்பூன்
2)கிராம்பு – 1
3)கற்பூரம் – 1

ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் செலரி மற்றும் ஒரு கிராம்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஒரு காட்டன் துணியில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு கற்பூரத்தை போட்டு மூட்டை கட்டை சுவாசித்தல் சளியால் ஏற்பட்ட மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.

செலரி மற்றும் கிராம்பை சூடாக்கி அதன் வாசனையை சுவாசிப்பதினால் மன அழுத்தம் நீங்கும்.இந்த பொருட்கள் சுவச மண்டலத்தில் உள்ள தொற்றுக்களை நீக்க உதவுகிறது.இரவில் ஏற்படும் மூக்கடைப்பு பிரச்சனைக்கு இந்த இயற்கை இன்ஹேலர் பெரிதும் உதவியாக இருக்கும்.

1)துளசி
2)ஓமம்
3)சுக்கு

செய்முறை:-

ஒரு கரண்டியில் சூடான அடுப்பு கரி சேர்த்து சிறிது உலர்த்திய துளசி இலைகள்,1/4 தேக்கரண்டி ஓமம் மற்றும் சிறிய துண்டு சுக்கை அதில் போட்டு புகைமூட்டி சுவாசித்தால் சளியால் ஏற்பட்ட மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.