உடல் எடையைக் குறைக்கனுமா? தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க போதும்

0
224

உடல் எடையைக் குறைக்கனுமா? தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க போதும்

 

உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜூஸ் மூலம் உடல் எடையைக் குறைப்பது. ஆனால் நம்மில் சிலர் உடல் எடையைக் குறைக்க டயட் இருக்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் அவர்களின் உடல் எடை குறையும். ஆனால் சரியான உணவு எடுக்காததால் அவர்களின் உடலில் உள்ள சத்துக்கள் குறைந்து, அதனால் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.

 

அதனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தாலும், தினமும் போதிய சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்படி டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

 

ஒருவேளை உங்களால் மேலே கூறியது போல டயட் இருக்க முடியாவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஜூஸை மட்டும் தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ். இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலுக்கு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் உள்ளிட்டவை சீராக கிடைத்து, உடல் எடையும் குறையும்.

 

இப்போது அந்த ஜூஸ் எப்படி செய்வது என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.

 

இந்த பச்சை நிற ஜூஸானது பார்ஸ்லி கொண்டு செய்யப்படுவதாகும். பார்ஸ்லியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதோடு, வைட்டமின் சி, கே மற்றும் ஈ உள்ளிட்ட சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது.

 

ஜூஸ் செய்யும் முறை:

பார்ஸ்லி – 1 கட்டு

எலுமிச்சை – 1

தண்ணீர் – 1 கப்

 

முதலில் பார்ஸ்லியை நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, வடிகட்டி கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த சாற்றில் எலுமிச்சையை பிழிந்து விட வேண்டும்.

 

இதில் 1 கப் தண்ணீர் ஊற்றி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

 

ஆனால் வெறும் 5 நாட்கள் மட்டும் குடிக்க வேண்டும். பின் 10 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 5 நாட்கள் குடிக்க வேண்டும்.

 

இப்படி செய்தால் உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

 

புற்றுநோயைத் தடுக்கும் பார்ஸ்லியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் அது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும்.

 

எச்சரிக்கை:

 

கர்ப்பிணிகள் இந்த பார்ஸ்லியை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அது மாதவிடாயைத் தூண்டி, கருவை கலைத்துவிடும். அதனால் இந்த ஜுஸ்ஸை கர்ப்பிணிகள் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Previous articleமக்களே உஷார்!! இந்த உணவுகளை ஒரு தடவைக்கு மேல் சூடு படுத்தினால் விஷமாக விடும்!!
Next articleதீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here