குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை சரி செய்ய இயற்கை மருந்து
மஞ்சளும் அதன் மருத்துவ மகிமையும் அனைவரும் அறிவர்.அந்த அளவிற்கு மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்தது.
மஞ்சள் இயற்கையாகவே பல்வேறு மருத்துவத் தன்மைகளைக் கொண்டது. நச்சுகளை நீக்கும்.மருத்துவத்தில் தொடங்கி இறை வழிபாடுகள்வரை அனைத்திலும் பயன்படும். சளி, வறட்டு இருமல், தொண்டைவலி, வீக்கம், காய்ச்சல், வறண்ட சருமம் போன்றவைகளுக்கு உதவும்.
மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சுவாசக் கோளாறுகள் முதல் மூட்டுவலி பிரச்னைகள் வரை தீர்க்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
புனிதப் பொருளாகவும், அரு மருந்தாகவும் பயன்படும். மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்புக்குச் சிறந்த மருந்து. நல்லெண்ணெய் விளக்கில் சுட்டு அந்தப் புகையை மூக்கின் வழியாக உள்ளே இழுக்க மூக்கடைப்பு மற்றும் இரைப்பு கட்டுப்படுத்தப்படும்.
மஞ்சளை நன்கு குழைத்து நீர் விட்டுப் பூசி வர குளிர் காலத்தில் ஏற்படும் வறண்ட சருமப் பிரச்னைகள் நீங்கி சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும். அஜீரணக் கோளாறுகளில் இருந்து விடுபட உணவில் சற்றே அதிகமாக மஞ்சளைச் சேர்த்துக் கொள்வது நல்லது.
மஞ்சளை பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம். சளி இருமலுக்கு இது நல்ல மருந்து.