பரம குடிகாரராக இருந்தாலும் இதை செய்தால் இனி வாழ்நாளில் குடிக்க மாட்டார்!! 100% பலன் தரும் இயற்கை மருத்துவம்!!

Photo of author

By Divya

பரம குடிகாரராக இருந்தாலும் இதை செய்தால் இனி வாழ்நாளில் குடிக்க மாட்டார்!! 100% பலன் தரும் இயற்கை மருத்துவம்!!

குடி குடியை கெடுக்கும் என்பது போல் வீட்டில் ஒருவர் குடிக்கு அடிமையாகி விட்டாலும் அந்த வீட்டில் நிம்மதி,சந்தோசம் இருக்காது.குடி பழக்கத்தால் வாழ்க்கை சரிவை நோக்கி செல்வதோடு உடல் ஆரோக்கியமும் கெட்டுவிடும்.

ஒருமுறை குடிக்க தொடங்கிவிட்டால் அந்த பழக்கத்தை நிறுத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.ஆனால் குடிப்பழத்திற்கு இயற்கை வழியில் தீர்வு இருக்கிறது.இதை தொடர்ந்து பின்பற்றி வந்தால் குடி பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

தீர்வு 01:-

தேவையான பொருட்கள்:

1)வில்வ இலை
2)ஏலக்காய்
3)கொத்தமல்லி விதை
4)பனை வெல்லம்

செய்முறை:

உரலில் இரண்டு வில்வ இலை,ஒரு ஏலக்காய்,ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் இடித்து வைத்துள்ள கலவையை போட்டு 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பின்னர் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் ஒரு மாதத்தில் குடி பழக்கத்தில் இருந்து மீண்டு விடலாம்.

தீர்வு 02:-

தேவையான பொருட்கள்:

1)வில்வ இலை பொடி

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வில்வ இலை பொடி சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் குடி பழக்கம் கட்டுப்படும்.

தீர்வு 03:-

தேவையான பொருட்கள்:

1)ஏலக்காய் விதை
2)எலுமிச்சை விதை

செய்முறை:

மிக்ஸி ஜாரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் விதை,ஒரு தேக்கரண்டி எலுமிச்சை விதை சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அரைத்த பொடியை போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் விரைவில் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தீர்வு 04:-

தேவையான பொருட்கள்:

1)கொத்தமல்லி விதை
2)மிளகு

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.