சர்க்கரை வியாதியை குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! தாமதம் இல்லாமல் உடனே செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

சர்க்கரை வியாதியை குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! தாமதம் இல்லாமல் உடனே செய்யுங்கள்!!

Rupa

Natural Remedies for Diabetes!! Do it immediately without delay!!

இக்காலத்தில் சர்க்கரை நோய் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரக் கூடிய வியாதியாக உள்ளது. உடல் ஆரோக்கியமின்மை, மோசமான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடுகிறது.

இந்த சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குறைத்துவிட்டால் நோய் அபாயத்தை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்:

1)மூச்சு திணறல்
2)வயிற்று வலி
3)வாந்தி
4)குமட்டல்
5)குழப்பம்
6)திடீர் உடல் எடை குறைதல்

சர்க்கரையை குறைக்கும் இயற்கை வைத்தியம்:

1)பாகற்காய்

தினமும் பாகற்காய் ஜூஸ் அருந்தி வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறையும். பாகற்காயில் உள்ள கிளைகோசைட் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

2)நெல்லிக்காய்

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். நெல்லிக்காயை அரைத்து ஜூஸாக எடுத்து கொண்டாலும் பலன் கிடைக்கும்.

3)வெந்தயம்

தினமும் ஊறவைத்த வெந்தயம் சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிடுவதால் இன்சுலின் அளவு அதிகரிக்கும். வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடலாம் அல்லது பொடியாகவும் பயன்படுத்தலாம்.

4)கொத்து அவரை

தினமும் ஒரு கிளாஸ் கொத்து அவரை ஜூஸ் அருந்தி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

5)நாவல் விதை மற்றும் நாவல் பழம்

இதில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

6)வெண்டைக்காய்

ஒரு கிளாஸ் நீரில் வெண்டைக்காயை நறுக்கி போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.