இடுப்பு வலி தாங்க முடியவில்லையா? உங்களுக்கான இயற்கை வைத்திய முறைகள்!

Photo of author

By Kowsalya

எல்லோருக்கும் பொதுவாக வரக்கூடிய வலி இடுப்பு வலி தான். இந்த காலகட்டத்தில் சாப்பிடும் உணவுகளில் சத்துக்கள் இல்லாமையால் எலும்புகளில் தேய்மானம் அடைந்து விடுகின்றன. பொதுவாக பெண்களுக்கு அதிகமாக இடுப்பு வலி ஏற்படுகின்றது. அதற்கு காரணம் கர்ப்ப காலத்தில் போடப்படும் ஊசியாகவும் இருக்கலாம். அதன் பின் அவர்கள் செய்யும் வேலைகள் இடுப்பு வலி தரக்கூடியவை.

அதே போல் வேலைக்கு செல்லும் பெண்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது இன்னும் அதிகமாக இடுப்பு வலி ஏற்படலாம். அதே போல் ஆண்களுக்கும் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதனால் இடுப்பு வலி அதிகமாக வரக்கூடும்.

இப்பொழுது இதை சரிசெய்ய ஒரு இயற்கை வைத்திய முறையை தான் பார்க்கப் போகின்றோம்.

குறிப்பு 1:

நாட்டு மருந்து கடைகளில் இலுப்ப எண்ணெய் என்று கேட்டால் தருவார்கள். அந்த இலுப்ப எண்ணையை வாங்கி கொள்ளுங்கள். கட்டியாக இருக்கும் இலுப்பை எண்ணெயை சூடு ஏற்றினால் கரையும். முழுதாக கரைந்தவுடன் அதை ஆற வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின் இந்த இலுப்பை எண்ணெயை எடுத்து இடுப்பில் எங்கு வலி உள்ளதோ அங்கு நன்றாக தடவி விட்டு பின் சுடுநீர் ஒத்தடம் கொடுக்கும்போது உடனடி நிவாரணம் கிடைக்கும்.

குறிப்பு 2:

நம் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, பூண்டு மற்றும் பனை வெல்லம் மற்றும் பொடுதலை இலை ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதை இரண்டு குண்டுமணி அளவிற்கு காலையில் ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

குறிப்பு 3:

ஓமத்தை சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில் 100 மில்லி அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மற்றும் அதனுடன் சிறிது கற்பூரத்தைச் சேர்த்து நன்கு காய்ச்சி வெது வெதுப்பாக இருக்கும் பொழுது இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி குறையும்.

குறிப்பு 4:

கஸ்தூரி மஞ்சள், பூண்டை எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது நொச்சி இலை யையும் எடுத்துக் கொள்ளவும். நொச்சி இலை, கஸ்தூரி மஞ்சள், பூண்டு மூன்றையும் அரைத்து வைத்துக் கொண்டு அதை வேப்பெண்ணெய் விட்டு நன்கு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு இடுப்பு வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் இடுப்பு வலி குறையும்.

குறிப்பு 5:

இடுப்பு வலிக்கு முடக்கத்தான் கீரை மிகவும் பெரிதும் பயனுள்ளதாக அமைகின்றது. முடக்கத்தான் கீரையை வாங்கி அதனுடன் வெங்காயம் மற்றும் பருப்பு சேர்த்து கூட்டு போல் சமைத்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.