48 நாட்களில் கர்ப்பப்பை அடைப்பு நீங்க இயற்கை வைத்தியமுறை!

0
192
natural-remedies-to-cure-uterine-obstruction-in-48-days
natural-remedies-to-cure-uterine-obstruction-in-48-days

இப்பொழுது 50 சதவீதம் பெண்களுக்கு தொடர்ந்து கர்ப்பப்பை பிரச்சனைகள் வந்து விடுகின்றன. கர்ப்பப்பை பிரச்சனைகள் தீர, கர்ப்பபை அடைப்பு நீங்க இந்த இயற்கை வைத்தியத்தைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. அரச இலை 1

2. வெற்றிலை1

3. முருங்கைப் பூ 10

4. ஏலக்காய் 1

5. சீரகம் அரை ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு உரலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் அரச இலை மற்றும் வெற்றிலையை நரம்பு நீக்கி சேர்த்து நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.

3. இப்பொழுது அதை எடுத்து விட்டு அதில் ஏலக்காய் ஒன்று, முருங்கைப் பூ 10, சீரகம் அரை ஸ்பூன் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

4. இது ஒரு வேளைக்கான மருந்து.

5. இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்கு உருட்டி தேன் அல்லது ஆட்டு பாலுடன் சேர்த்து 48 நாட்கள் கலந்து சாப்பிட்டு வர கருப்பை அடைப்பு நீங்கும்.

பச்சைப்பயறு, கொண்டக்கடலை, தட்டப்பயிறு, கம்பு, மக்காச்சோளம், சோளம் இவற்றை முளைகட்டி 50 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வர கருப்பை அடைப்பு நீங்கும். கர்ப்பம் சீக்கிரம் தறிக்கும் தன்மையைப் பெற முடியும்.

Previous articleஎப்பேர்ப்பட்ட தலைவலியும் நொடியில் பறந்துபோகும்!! இதோ உங்களுக்கான பாட்டி வைத்தியம்!!
Next articleஇயக்குனர் விக்ரம் சுகுமாரனுக்கு வந்த பட வாய்ப்புகள்!! அதனை தட்டி பறித்த நடிகர்!!