பல் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவை போக்க உதவும் இயற்கை டிப்ஸ்!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

இன்று பலரும் பல் ஈறு பிரச்சனைகளால் அவதியடைந்து வருகின்றனர்.ஈறுகளில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டால் பற்கள் பலவீனமடைந்துவிடும்.உடலில் குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும்.

ஈறுகளில் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள்:

*வாய் துர்நற்றம்
*பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் வலி
*ஈறுகளின் நிறம் மாறுதல்
*பற்கள் தளர்வடைதல்

பற்களை அழுத்தி துலக்குதல்,கூர்மையான பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்தல்,ஈறுகளில் அதிக அழுத்தம் உண்டதால் போன்ற காரணங்களால் இரத்த கசிவு ஏற்படுகிறது.

பல் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் இயற்கை வழிகள்:

1)கல் உப்பு
2)தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.வெதுவெதுப்பான பதம் வரும் வரை சூடுபடுத்தி கல் உப்பு கலந்து வாயை கொப்பளத்து வந்தால் பல் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவது கட்டுப்படும்.

1)தேங்காய் எண்ணெய்

தினமும் பல் துலக்கிய பிறகு சிறிது தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி ஆயில் புல்லிங் செய்தால் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படுவது கட்டுப்படும்.

1)தேன்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சுத்தமான தேன் ஊற்றி வாயை கொப்பளித்து வந்தால் ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படாமல் இருக்கும்.

1)வேப்ப எண்ணெய்
2)தண்ணீர்

ஒரு கிளாஸ் நீரில் சிறிதளவு வேப்ப எண்ணெய் ஊற்றி கலக்கவும்.இதை வைத்து வாய் கொப்பளித்தால் பல் ஈறு சம்மந்தபட்ட பிரச்சனைகள் அகலும்.

1)கற்றாழை
2)பேக்கிங் சோடா

ஒரு தேக்கரண்டி பிரஸ் கற்றாழை ஜெல்லில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கவும்.பிறகு இதை டூத் பிரஷில் வைத்து பற்களை துலக்கினால் பல் ஈறு தொடர்பான அனைத்து பாதிப்புகளும் நீங்கிவிடும்.

1)மாதுளை

அடிக்கடி மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் பல் ஈறு பிரச்சனை முழுமையாக குணமாகும்.