ஆஸ்துமாவால் அவதியா?பிரச்சனையை போக்கும் சிறந்த வீட்டு வைத்தியம்

0
221

ஆஸ்துமாவால் அவதியா?பிரச்சனையை போக்கும் சிறந்த வீட்டு வைத்தியம்

ஆஸ்துமா அதாவது ஒவ்வாமை தவிர்க்க முடியாத ஒரு பாதிப்பாக மாறி வருகிறது.ஆஸ்துமா ஒரு குணப்படுத்த முடியாத பாதிப்பு என்றாலும் அதை சில வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதில் கட்டுப்படுத்தி விட முடியும்.

வெற்றிலை சாறு – 20 மில்லி
தேன் – 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 20 கிராம்
சுக்குத் தூள் – 20 கிராம்

ஒரு முழு வெற்றிலையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஐந்து முதல் எட்டு மிளகு மற்றும் ஒரு சிறிய துண்டு சுக்கை லேசாக சூடாக்கி அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

அரைத்த மிளகு மற்றும் சுக்கு தூளை வெற்றிலை சாறு உள்ள கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.இதனை தொடர்ந்து 1/2 தேக்கரண்டி தேனை அதில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பாதிப்பு முழுமையாக குணமாகும்.

வெந்தயம் – 2 தேக்கரண்டி
இஞ்சி சாறு – 2 தேக்கரண்டி
தேன் – 1 தேக்கரண்டி

ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டிக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சி எடுத்து தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்து வெந்தய நீரில் சேர்த்து கலந்து விடவும்.பின்னர் 1 தேக்கரண்டி சுத்தமான தேனை அதில் சேர்த்து கலக்கி குடித்தால் ஆஸ்துமா பாதிப்பு முழுமையாக குணமாகும்.

பூண்டு சாறு – ஒரு தேக்கரண்டி
தேன் – ஒரு தேக்கரண்டி

நான்கு பல் பூண்டை தோல் நீக்கி அரைத்து ஒரு கிளாஸ் நீரில் சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு இதை வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து பருகி வந்தால் ஆஸ்துமா பாதிப்பு குணமாகும்.

Previous articleவிவசாயிகளுக்கு குட் நியூஸ்! உதவித்தொகை கிடைக்கவில்லையா? இதைப் பண்ணுங்க
Next articleஇறந்தவரின் ஆதார் கார்டு என்னவாகும் என்று தெரியுமா? இதை அவசியம் செய்ய வேண்டுமாம்!!