பாஜக முன்னாள் எம்பியுடன் நயன்தாரா சந்திப்பு: அரசியலில் நுழைகிறாரா?

Photo of author

By CineDesk

பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் அவர்களை நயன்தாரா சந்தித்ததாகவும் இதனால் அவர் அரசியலில் நுழைந்து பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா நேற்று தனது வருங்கால கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலிலும், திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலிலும் அவர் தரிசனம் செய்ததாக புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகனை நயன்தாரா தரிசனம் செய்து கொண்டிருந்தபோது அங்கு தற்செயலாக குடும்பத்துடன் வந்த பாஜக முன்னாள் எம்பி நரசிம்மன் அவர்களை சந்தித்து பேசியதாகவும் இருவரும் ஒரு சில நிமிடங்கள் பேசியதை வைத்து நயன்தாரா பாஜகவில் சேர இருப்பதாகவும் அரசியலில் நுழைய இருப்பதாகவும் வதந்திகள் வெளியாகி வருவதாகவும் தெரிகிறது.

நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே வரமாட்டார் என்பதால் அவர் அரசியலில் ஈடுபட வாய்ப்பு இல்லை என்றும் திரையுலகில் இன்னும் ஒரு சில ஆண்டுகள் நடித்திவிட்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து அவர் செட்டிலாகிவிடுவார் என்றும் அவரது தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும் நயன்தாரா பாஜகவில் சேரவிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.