சமீப காலமாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் இரண்டாவது பாகத்தில் நடித்து வரக்கூடிய நயன்தாரா குறித்து இயக்குனர் நடன கலைஞர் மற்றும் நடிகரான பிரபுதேவா பேசியிருக்க கூடிய வீடியோவானது வைரலாகி வருகிறது.
நயன்தாராவின் வாழ்வில் சிம்பு முதல் காதல் என்றும் பிரபுதேவா இரண்டாவது காதல் என்றும் அனைவருக்கும் தெரியும். முதல் காதலை விட இரண்டாவது காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என இருவரும் மிகுந்த நம்பிக்கையோடும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் திடீரென இவர்களுக்கிடையே இருந்த காதலானது துண்டிக்கப்பட்டது யாரும் எதிர்பாராத ஒன்று. காரணம் இவர்கள் இருவருக்கிடையே ஆனா காதலுக்காக பிரபுதேவா அவருடைய முதல் மனைவி குழந்தைகளை விடுத்து நயன்தாரா அவருடைய மதமாற்றம் போன்றவற்றை ஈடுபட்டதோடு சினிமா துறையும் விட்டு வெளியேறினார். ஆனால் ஏன் இருவரும் பிரிந்தனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
அதன்பின் சினிமாவிற்கு சிறிது காலம் ஓய்வலித்த நயன்தாரா அவர்கள் மீண்டும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கிய இடம் தான் நானும் ரவுடிதான் திரைப்படம். இந்த திரைப்படத்தில் இயக்குனரான விக்னேஷ் சிவனை தன்னுடைய இரண்டாவது சினிமா இன்னிங்ஸில் நயன்தாரா காதலிக்க துவங்கினார். இருவரும் சில வருடங்கள் லிவிட் கேதரிலிருந்து பின்பு திருமணம் செய்து கொண்டு தற்பொழுது இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா அவர்கள் நயன்தாரா குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது :-
எப்பொழுதுமே ஒரு ஹீரோயின் ஒரு படத்தை நடித்து முடித்து விட்டார் என்றால் அந்த படத்தை பற்றி முழுவதுமாக மறந்து விடுவது வழக்கமான ஒன்று ஆனால் நயன்தாராவோ அப்படி இல்லை படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆன பிறகும் அது தன்னுடைய படம் என நினைத்து ஒரு ஹீரோ இயக்குனர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்களோ அதே போல் நயன்தாராவும் கொடுத்தார் என்று அவர் அனைத்திலும் சின்சியராக இருப்பார் என்றும் பிரபுதேவா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.