வாடகைத் தாய் சர்ச்சை… நயன்தாரா விசாரணைக்கு அழைக்கப்படலாம்… அமைச்சர் தகவல்!
வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொண்டுள்ள விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதியினரை சுற்று சர்ச்சை சூழ்ந்துள்ளது.
குழந்தை பிறந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகளை சுற்றி சர்ச்சைகள் உருவாகியுள்ளன. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்களது திருமணத்தில் அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஜூன் மாதம் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் நிறைவுபெற்ற நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை ஆண்குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த குழந்தைகளை அவர்கள் வாடகைத் தாய் மூலமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்கள் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தியாவில் வாடகைத் தாய் மூலமாக குழ்ந்தை பெற்றுக்கொள்ள பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் முக்கியமானது திருமணமான தம்பதிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால்தான் வாடகைத் தாயை அணுக முடியும். மேலும் வாடகைத் தாயாக வருபவர் தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு ரத்த சொந்தமாக இருக்கவேண்டும். அதையெல்லாம் மீறிதான் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சர்ச்சைகளுக்கு அடுத்து இது சம்மந்தமாக விசாரணைக்காக மூவர் கொண்ட விசாரணைக் குழுவை சுகாதாரத்துறையினர் அமைத்துள்ளது. அவர்கள் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நயன்தாரா குழந்தைப் பெற்றுக்கொண்ட மருத்துவமனை பற்றிய தகவலை கண்டுபிடித்துள்ளதாக அமைச்சர் மா சுபர்மண்யன் தெரிவித்துள்ளார். மேலும் இது சம்மந்தமாக தேவைப்பட்டால் ‘நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிகளும் விசாரணைகு அழைக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.