நிலத்தை அபகரித்த மாநகராட்சி: தலைமைச் செயலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் !

0
134

நிலத்தை அபகரித்த மாநகராட்சி: தலைமைச் செயலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் !

கும்பகோணத்தைச் சேர்ந்த விமலா என்ற பெண் தலைமைச் செயலக வளாகத்தில் தீ குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை விமலா தன் குடும்பத்துடன் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்துள்ளார். அவர் நான்காவது நுழைவாயில் அருகே நீண்ட நேரமாக காத்திருந்தார். திடீரென அவர் தன் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் உள்ள மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். உடனே அருகில் இருந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் உடனடியாக விமலா மீது தண்ணீர் ஊற்றி அவரை தடுத்தனர்.

அவரை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கண்ட போது, அவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் கூறியதாவது, எனக்கு சொந்தமான நிலத்தை ஏற்கனவே கும்பகோணம் மாநகராட்சிக்கு வழங்கியுள்ளதாகவும், தற்போது அதையும் மீறி தனக்கு சொந்தமான பூர்வீக நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை மாநகராட்சி அபகரித்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்ததாகவும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதாலும், இத்தகைய முடிவிற்கு வந்ததாக விமலா கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்புதான் உயர் நீதிமன்ற வளாகத்தில் தன் மகனுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கவில்லை என வேல்முருகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தற்போது தலைமைச் செயலகத்திலும் இது போல் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Parthipan K