தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

0
281

தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினிக்கு ஜோடி என்ற கேரக்டர் ஒன்றே படத்தில் இல்லையென்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. படத்தில் சிங்கிள் மேனாகத்தான் ரஜினி நடிக்கிறாராம். இந்தப்படத்தில் நயன்தாரா நடித்துவருவதால், அவர்தான் ரஜினியின் ஜோடியாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், அந்த நினைப்பு தற்போது தவிடு பொடியாகியுள்ளது.

பல வருடங்களுக்குப் பிறகு, அதாவது தனது ஆரம்பக் காலக்கட்டப் படங்களுக்குப் பிறகு தற்போதுதான் ரஜினி இப்படியொரு ரோலில் நடிக்க சம்மதித்திருக்கிறார். அதற்கு காரணம், இயக்குநர் முருகதாஸ் சொல்லி அசத்தியிருக்கும் கதைதானாம்.

கதைப்படி ரஜினிக்கு ஜோடி இல்லாமல் இருந்தால்தான் திரைக்கதை இன்னும் வலுப்பெறும் என்பதாலயே முருகதாஸும் தீவிர ஆலோசனைக்குப் பிறகு இந்த ரிஸ்க்கான முடிவை எடுத்திருக்கிறாராம். மேலும் ரஜினியின் கேரியரில், காலம் கடந்து பேசப்படும் கேரக்டர்களில் ஒன்றாக இது இருக்குமென்றும் அவர் நம்புகிறாராம்.

தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதேசமயம் படத்தில் நயனின் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்குமாம். போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினியின் விசாரணையில் ஒரு முக்கிய அங்கமாக வரும் கேரக்டரைதான் நயன் செய்திருக்கிறாராம். அதாவது ரஜினியின் விசாரணைக்கு உதவும் கேரக்டர்களில் நயன்தாராவின் பங்கு பெரிய அளவில் இருக்குமாம்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ஏற்கெனவே முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கஜினி’யில் நயன்தாரா நடித்திருக்கும் ரோலைப்போல இந்தக் கேரக்டர் இருக்குமென யூகிக்கப்படுகிறது. அதனால், ரஜினியுடன் டூயட், ரொமான்ஸ் போன்ற சமாசாரங்கள் எல்லாம் எதுவும் ‘தர்பார்’ படத்தில் இல்லையாம்.

கேப்டன் விஜயகாந்த் பிஸி ஹீரோவாக இருந்த காலத்தில் அவரை வைத்து முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ படத்தில் அவர் இறப்பதுபோல ஒரு ரிஸ்க்கான கிளைமேக்ஸை படமாக்கியிருந்தார். அந்த முடிவு விஜயகாந்தின் ரசிகர்களை கோபமூட்டாததோடு படத்தின் வெற்றிக்கும் பெரும் பங்காக அமைந்திருந்தது. அந்த மேஜிக்தான் மீண்டும் ‘தர்பார்’ படத்திலும் நிகழப்போகிறது என யூனிட் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleஉலக கோப்பையா உள்ளூர் கோப்பையா? கலக்க போகிறது TNPL 2019 கிரிக்கெட் போட்டி!
Next articleஉத்திரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது! ராகுல் காந்தி கண்டனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here