நயன்தாராவின் சூடுபிடிக்கும் 75 ஆவது திரைப்படம்!! விரைவில் பர்ஸ்ட் லுக்!!

Photo of author

By CineDesk

நயன்தாராவின் சூடுபிடிக்கும் 75 ஆவது திரைப்படம்!! விரைவில் பர்ஸ்ட் லுக்!!

CineDesk

நயன்தாராவின் சூடுபிடிக்கும் 75 ஆவது திரைப்படம்!! விரைவில் பர்ஸ்ட் லுக்!!

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏராளமான திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் நடிப்பிற்காக ஏராளமான விருதுகளையும் வென்று இருக்கிறார்.

இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் காதிலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அடுத்து ஒருசில மாதங்களிலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாயின் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கல்யாணத்திற்கு பிறகு இவருக்கு ராசி இல்லாமல் போய் விட்டாதாக அனைவரும் கூறி வருகின்றனர்.

இதற்கு காரணம் சில காலமாக நயன்தாராவிற்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அட்லி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஷாருக்கான் படத்தில் இவர் ரி-என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்து தன்னுடைய 75 ஆவது படத்திலும் நடிக்க உள்ளார். இப்படத்தை சங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார்.

இப்படத்தில் ராஜா ராணிக்கு பிறகு மீண்டும் ஜெய் நயன்தாராவுடன் இணைய உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. தற்போது நயன்தாரா இந்த படத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மூலமாக இவர் மீண்டும் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறார். மிகப்பெரிய அளவில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா ஒரு மிடில் கிளாஸ் பெண்ணாக நடிக்கிறார்.

மேலும் குடும்பக்கதையில் உருவாகும் இந்த படத்தில் ஜெய்யும் நயன்தாராவும் ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு இடையே மலரும் காதல் வழக்கம் போல் இல்லாமல் புதுவிதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நயன்தாராவிற்கு தான் அதிக முக்கியத்துவம் என்றும், இப்படத்திற்காக இரண்டு செட்கள் அமைக்கப்பட்டு அதில் ஒன்றானது மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்திற்கான முதல் கட்ட காட்சிகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட காட்சிகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. எனவே நயன்தாராவின் 75 அவது படம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. விரைவில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.