நயன்தாராவுக்கு அடுத்த பிரச்சனையா!! படமே நிறுத்தப்பட்டதா!!

Photo of author

By Gayathri

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா சமீபத்தில் femi 9 பிராடெட்டிக்கான ப்ரோமோஷன் நிகழ்வில் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது. அந்த சர்ச்சையின் தாக்கம் தற்சமயம் வரை முடியாத நிலையில் மற்றொரு சர்ச்சை கிளம்பி உள்ளது. கொஞ்ச நாள்களாகவே குழந்தைகளின் நலனில் கருத்தில் கொண்டு பெரிதாக திரைப்படம் நடிக்கவில்லை நயன். தற்சமயம் கேஜிஎஃப் நடிகர் யாஷுடன் இணைந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பானது பெங்களூரில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டு வருகின்றது. இப்படப்பிடிப்பின் போது படக்குழு அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. மேலும், இது தொடர்பாக படக்குழுவிற்கு ஹைகோர்ட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

டாக்ஸிக் படத்தில் நயனுடன் யாஷ், கியாரா அத்வானி மற்றும் பலர் இணைந்து நடித்து வருகின்றனர். சமீபத்தில் திரைப்பட கதாநாயகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டு வைரலானது. அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து தான் இந்த நோட்டீஸ் ஆனது அனுப்பப்பட்டுள்ளது. இப்படத்தின் படக் குழுவினர் உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பிற்காக அங்குள்ள மரங்களை வெட்டி உள்ளனர். இந்நிலையில், படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்து விளக்கம் கேட்டுள்ளது கர்நாடகா அரசு. மொத்த படக்குழுவும் இதனால் சிக்கிக் கொண்டுள்ளது. படக்குழுவின் விளக்கத்தை பொருத்தே கர்நாடகா அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது.