இலங்கையில் ஆசியகோப்பை தொடர்… இந்தியா vs பாகிஸ்தான்… கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

Photo of author

By Vinoth

இலங்கையில் ஆசியகோப்பை தொடர்… இந்தியா vs பாகிஸ்தான்… கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்!

Vinoth

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா கிரிக்கெட் அணி கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம்.

இந்நிலையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நவம்பர் மாதத்தில் நடக்க உள்ளது. அதிலும், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அந்த போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் அந்த போட்டிக்கு முன்னதாகவே இரு அணிகளும் மோத உள்ளன. இலங்கையில் ஆகஸ்ட்டில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிரது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும், இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும். இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது.