ஒரு நிமிடத்தில் வாந்தி குமட்டலுக்கு தீர்வு வேண்டுமா? அப்போ சமையலில் அறையில் இந்த பொருள் இருக்கானு பாருங்க!!

Photo of author

By Gayathri

நீண்ட தூர பயணம் என்பது அனைவருக்கும் விரும்பும் ஒன்று.ஆனால் சிலருக்கு நீண்ட தூர பயணம் பிடிக்காத ஒன்றாக இருக்கிறது.காரணம் வாந்தி,குமட்டல் பிரச்சனை தான்.சிலருக்கு உணவுகளால் வாந்தி,குமட்டல் ஏற்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு சூழல்களில் மனிதர்களுக்கு வாந்தி,குமட்டல் பிரச்சனை ஏற்படுகிறது.இதை சரி செய்ய சித்த மருத்துவ முறையை பின்பற்றலாம்.வாந்தி,குமட்டலுக்கு இஞ்சி சிறந்த தீர்வாக உள்ளது.

பக்க விளைவுகள் இன்றி வாந்தி,குமட்டலை சரி செய்ய இஞ்சியை பயன்படுத்தலாம்.அதற்கு முதலில் நீங்கள் ஒரு துண்டு இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் தோலை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு அலசவும்.

இப்படி செய்தால் இஞ்சியில் உள்ள அழுக்குகள்,மண் அனைத்தும் நீங்கிவிடும்.பிறகு இதை உரலில் வைத்து இடிக்கவும்.உரல் இல்லாதவர்கள் மிக்சர் ஜாரில் இஞ்சி துண்டை போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளலாம்.

பிறகு இந்த சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு தூய்மையான தேன் சேர்த்து பருக வேண்டும்.இப்படி செய்வதால் வாந்தி,குமட்டல் முழுமையாக நிற்கும்.

அதேபோல் இரண்டு அல்லது மூன்று புதினா இலைகளை வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் வாந்தி,குமட்டல் ஏற்படுவது நிற்கும்.எலுமிச்சம் பழம் குமட்டலை கட்டுப்படுத்த உதவுகிறது.எலுமிச்சம் பழத்தை பிழிந்து தண்ணீர் கலந்து பருகினால் குமட்டல் சரியாகும்.சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து பருகினால் வாந்தி,குமட்டல் சரியாகும்.அதேபோல் லெமன் டீ செய்து பருகினாலும் வாந்தி,குமட்டல் சரியாகும்.