குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

Photo of author

By Rupa

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

Rupa

Need to change something on the family card? Use tomorrow as the last day!

குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டுமா? நாளைய தினம் தான் கடைசி நாள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. அந்த அறிவிப்பை அடுத்து பலர் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க தொடங்கினர். அவ்வாறு விண்ணப்பித்து வந்ததில் பலருக்கு பெயர் ,முகவரி ,தொலைபேசி எண் என்பது மாற்றம் அடைந்து வந்தது. இதனை மாற்றுவதற்கு மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மாற்ற மாதம்தோறும் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் தற்போது 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் கலந்துகொண்டு மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்ற நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம். இந்த முகாம் நாளை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கப்படுவது முகவரி ,கைபேசி போன்றவற்றை மாற்றம் செய்துகொள்ளலாம். குடும்ப அட்டை விண்ணப்பிப்போர்  இந்த முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். அதேபோல நியாயவிலை கடைக்கு சென்று பொருள்களை பெற இயலாத வயதானோர் மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவரவர் பகுதியில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்  பொருட்களின் ஏதேனும் குறை இருந்தாலோ  புகார் தெரிவிக்க விருப்பம் இருந்தாலும் இந்த குறைதீர்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு  மனு கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் புகார்களை கண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.