பொன்னுக்கு வீங்கியை குணப்படுத்தும் வேப்பிலை!! இதை இந்த மாதிரி பயன்படுத்துங்கள் 100% ரிசல்ட் கிடைக்கும்!!

Photo of author

By Divya

தற்பொழுது பெரும்பாலான நோய் பாதிப்புகள் வைரஸ் தோற்றால் தான் ஏற்படுகிறது.அந்தவகையில் பொன்னுக்கு வீங்கி என்ற நோய் பாதிப்பு வைரஸ் மூலம் எளிதில் பரவக் கூடிய ஒன்றாகும்.இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் உமிழ்நீர் சுரப்பியில் கடும் வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கிவிடும்.

பொன்னுக்கு வீங்கி எதனால் ஏற்படுகிறது?

இந்த நோய் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் மம்பஸ் வைரஸ் தான்.இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர்,தும்மல் மற்றும் இருமல் போன்றவற்றின் மூலம் பிறருக்கு எளிதில் பரவுகிறது.இந்த வைரஸ் தாக்கம் கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரை நீடிக்கும்.இந்த வைரஸ் தொற்று உமிழ்நீர் சுரப்பை அதிகம் பாதிக்கச் செய்கிறது.

பொன்னுக்கு வீங்கி அறிகுறிகள்:-

1)காய்ச்சல்
2)தலைவலி
3)உடல் பலவீனம்
4)பசியின்மை
5)உணவு விழுங்குவதில் சிரமம்
6)கன்னங்கள் வீங்குதல்
7)எச்சில் விழுங்குவதில் சிரமம்

பொன்னுக்கு வீங்கி எப்படி கண்டறிய வேண்டும்?

*காதுகளின் முன் தாடையில் வீங்கி காணப்படுதல்
*தொண்டை பகுதியில் வீக்கம்

பொன்னுக்கு வீங்கியை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்:

வேப்பிலை
மஞ்சள் தூள்

முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த வேப்பிலை பேஸ்ட்டில் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் பூச வேண்டும்.

இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் பொன்னுக்கு வீங்கி பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டுவிடலாம்.

கற்றாழை மடல்

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கிவிட்டு ஜெல்லை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் பூசி வந்தால் அவை சீக்கிரம் சரியாகிவிடும்.

இஞ்சி
மஞ்சள்

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த இஞ்சி பேஸ்ட்டில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை பொன்னுக்கு வீங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பூசினால் சீக்கிரம் ஆறிவிடும்.